அடுத்த வருடம் முதல் 5G தொழில்நுட்பத்தை அறிமுகமா…?


5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப விவகாரங்களுக்கான அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு 5G தொழில்நுட்பத்தை வழங்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியை வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post