இந்திய ஐஃபோன் பயனாளர்களை கவரும் வகையில் மிக முக்கியமான அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அதன்படி ஆப்பிள் iOS-ன் 16.2 வெர்ஷனை அப்டேட் செய்வதன் மூலம் 5ஜி இணைப்பை பெற முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கான திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.
இதனால் ஆப்பிள் பயனாளர்களுக்கான 5ஜி சேவையை பீட்டா முறையில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 16.2 வெர்ஷன் மூலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 2020ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு வெளியான ஐஃபோன்களான 12, 13, 14 சீரிஸ் மற்றும் ஐஃபோன் SE 3 மாடல்களில் 5ஜி சேவையை பெறமுடியும்.
Settings > General > Software update என்ற ஆப்ஷனில் சென்று ஆப்பிள் பயனாளர்கள் சாஃப்ட்வேர் அப்டேட் செய்துக் கொள்ளலாம். அதன் பிறகு go to Settings > Mobile Data > Mobile Data options > Voice and Data > 5G or 5G auto என்ற ஆப்ஷனை தேர்வு செய்து 5ஜி சேவையை பெறலாம்.
5ஜி சேவை பயன்படுத்துவதால் பேட்டரி குறையும் என்பதே இதில் இருக்கும் ஒரே பாதகம் என ஆப்பிள் எச்சரித்திருக்கிறது. ஆகையால் 5G க்கு பதில் 5G Auto என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பேட்டரி லைஃபை பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், நாக்பூர், பானிபட், குருகிராம், கவுகாத்தி, பாட்னா, சிலிகுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏர்டெல் நெட்வொர்க் வைத்திருக்கும் ஐஃபோன் பயனர்களும், டெல்லி - NCR, மும்பை, சென்னை, கொல்கத்தா, குஜராத் (33 மாவட்டங்கள்), வாரணாசி, பெங்களூரு, ஐதராபாத், புனே, ராஜஸ்தானில் உள்ள நாதத்வாரா ஆகிய பகுதிகளை சேர்ந்த ஜியோ நெட்வொர்க் வைத்திருக்கும் ஐஃபோன் பயனாளர்களுக்கும் இந்த 5ஜி சேவை வழங்கப்படும்.
5ஜி அப்டேட் மட்டுமல்லாமல், iOS 16.2ல் இன்னும் பல அப்டேட்களையும் ஆப்பிள் நிறுவனம் விட்டிருக்கிறது. அதன்படி, Apple music sing, Advanced Data Protection, Freeform, Bug Fixing, Security Fixes போன்ற புது அப்டேட்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, Freeform செயலியை ஆப்பிள் வெளியிட்டிருக்கிறது. இதனை ஆப்பிள் library-ல் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம். இதில் ஸ்கெட்ச் வேலைகளையெல்லாம் செய்து iClound-ல் save செய்துக்கொள்ளலாம். இதனை ஐபேடிலும் ஷேர் செய்யலாம்.
Apple music sing என்பது Spotify, jio saavn போன்ற songs செயலிகளில் பாடல்களின் வரிகள் வருவது போல ஐஃபோன் மியூசிக்கிலும் தற்போது பெறமுடியும். இது ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ் பாடல்களுக்கும் பொருந்தும். இதில் கூடுதல் வசதி என்னவென்றால் பாடலின் vocals-ஐ குறைத்து வரிகளை பார்த்து நீங்களாக சொந்தக் குரலில் பாடவும் செய்ய முடியும்.
அடுத்ததா Advanced Data Protection Settings > Profile > iClound -ல் இருக்கும். இதை On செய்து வைப்பதன் மூலம் iClound backup மட்டுமல்லாமல் மற்ற செயலிகளுக்கும் இந்த அம்சம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே இந்த அம்சம் enable செய்யப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகளின் சைபர் செக்யூரிட்டியை பொறுத்து படிப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Apple Music Sing in iOS 16.2 is EXTREMELY COOL pic.twitter.com/6wKAOptjEl
— Sam Kohl (@iupdate) December 7, 2022
இதுபோக AirDrop-ல் தரவுகளை பெறுவதற்கான Custom செட்டிங்ஸ், Always on என்ற புதிய அம்சம் ஐஃபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் சீரிஸில் விடப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்துவதன் மூலம் wallpapper & notifications-ஐ லாக் ஸ்க்ரீனில் இருக்கும் போது மறைத்துக்கொள்ளலாம். 16.2 அப்டெட் ஐஃபோனுக்கு மட்டுமல்லாமல் ஐபேடுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Post a Comment