இலங்கை பொலிசிற்கு 500 புதிய ஜீப்கள்..!


இந்திய கடனுதவியின் கீழ் இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ள 500 ஜீப் வண்டிகளில் முதற்கட்டமாக 125 புதிய ஜீப் வண்டிகள் இன்று (22) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்து பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.

இங்கு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லே, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் திரு. டிலன் அலசிடம் ஜீப்புகளை அடையாளமாக கையளித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் டிரன் அலஸ், இலங்கை பொலிஸாருக்கு இன்றைய தினம் விசேட தினம் எனவும், சில பொலிஸ் நிலையங்களில் கடமைக்காக வாகனங்கள் இன்மைக்கு தீர்வாக இந்த 500 புதிய ஜீப்புகளை பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, திருட்டு மற்றும் போதைப்பொருள்களை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த புதிய ஜீப்கள் இலங்கை காவல்துறைக்கு மிகவும் அவசியமானவை, மேலும் கடந்த 3 ஆண்டுகளாக காவல்துறையினரால் வாகனங்களை வாங்க முடியவில்லை, மேலும் இந்திய உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதால் இத்திட்டம் விரைவாக வெற்றியடைய முடிந்தது. இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் டிலன் அலஸ் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்... சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக இலங்கை பொலிஸாருக்கு இந்த புதிய ஜீப்புகளை பொது பாதுகாப்பு அமைச்சர் வழங்கியுள்ளமை குறித்து இந்திய அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்....

 

Post a Comment

Previous Post Next Post