முட்டை விலை 50 – 55 ரூபாய் வரை விற்பனை செய்ய இணக்கம்...!


ஒரு முட்டையை 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையில் விற்பனை செய்ய கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டைத் தட்டுப்பாடு மற்றும் அதன் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர், கொழும்பு நகரிலுள்ள நுகர்வோருக்கு 55 ரூபா சில்லறை விலையில் இடைத்தரகர்கள் இன்றி முட்டை விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்நாயக்க அழககோன், தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post