பேலேயின் மறைவை முன்னிட்டு 3 நாட்கள் துக்க தினங்களாக பிரகடனம் : பிரேஸில் அரசு அறிவிப்பு…!


கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் மறைவையொட்டி, பிரேஸில் அரசாங்கம் 3 நாட்களை துக்க தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.

பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே (Pele) தனது 82 வயதில் வியாழக்கிழமை (29) காலமானார்.

1958, 1962, 1970 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ணப் போட்டிகளில் பிரேஸில் சம்பியனாகுவதற்கு பேலே பெரும் பங்காற்றினார்.

3 உலகக்கிண்ணங்களை வென்ற ஒரேயொரு வீரர் பேலே ஆவார்.

தனது 21 வருட கால்பந்தாட்ட வாழ்க்கையில் 1363 போடடிகளில் 1281 கோல்களைப் புகுத்தி அவர் உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

பிரேஸில் அணிக்காக 77 கோல்களைப் புகுத்தி அவர் சாதனை படைத்திருந்தார்.

அண்மைக்காலமாக சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் குடல் புற்றுநோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில்? பிரேஸிலின் சாவோ போலோ நகரிலுள்ள அல்பர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை (29) பேலே காலமானார் என அவரின் மகள் கெலி நசிமென்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post