கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தில் குரோஷியா 3 ஆம் இடத்தைக் கைப்பற்றியது.
இன்று நடைபற்ற 3 ஆம் இடத்துக்கான போட்டியில் மொரோக்கோவை கோல்கள் விகிதத்தில் குரோஷியான வென்றது.
கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கலீபா அரங்கில் இன்றிரவு இப்போட்டி நடைபெற்றது.
போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் ஜொஸ்கோ க்வார்டியோல், கோல் புகுத்தினார்.
எனினும், 2 நிமிடங்களின் பின்னர் மொரோக்கோவின் அச்ரவ் தாரி கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.
42 ஆவது நிமிடத்தில், குரோஷியாவின் 2ஆவது கோலை மிஸ்லாவ் ஓர்சிக் புகுத்தினார்.
இடைவேளையின்போது, குரோஷியா 2:1 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின் வேறு கோல்கள் புகுத்தப்படவில்லை. இதனால் குரோஷியா 2:1 கோல்கள் விகிதத்தில் வென்றது.
Post a Comment