பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!


பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' குறித்து இன்று முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் 2023 ஏப்ரல் 28-ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post