சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை(16) மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாளை(16) முதல் தொடர்ச்சியாக எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சுத்திகரிப்பிற்கு தேவையான மசகு எண்ணெய் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உற்பத்தி நடவடிக்கைகளுக்கு போதுமான மசகு எண்ணெய் கிடைக்காமையால் கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
அதற்கமைய, சுமார் 70 நாட்களாக சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.
நாளை(16) எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், நாளாந்தம் 1,500 மெட்ரிக் தொன் டீசல், 550 மெட்ரிக் தொன் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கு தேவையான 950 மெட்ரிக் தொன் எரிபொருள் ஆகியவற்றை விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Post a Comment