2023 ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 14 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று புதிய உச்சத்தைத் தொட்டது.
அதன் விளைவாக, அங்கு நோய் பரவல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளா்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து கொரோனா மரணங்களை சுகாதாரத் துறை அறிவிப்பதில்லை.
கடைசியாக டிசம்பர் 3 ஆம் திகதி நிகழ்ந்த கொரோனா மரணங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சா்ச்சைக்குரிய 'Zero-COVID' கொள்கை தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Post a Comment