டீசல் விலை (10 ரூபா ) குறைந்ததற்காக பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது! பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...!


டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படாததால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post