நாட்டின் மின்சார விநியோகத்தில் 45 வீதமான மின்சாரத்தை நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழங்குகிறது. இங்கு மூன்று இயந்திரங்களும் செயலிழந்தால் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும்.
அதேவேளை நீர்மின் நிலையங்களில் நீர்மட்டம் 75 வீதமாக குறைந்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் நீர்மின்சாரம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும், இதனால் நாடு இயங்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் .
Post a Comment