யாழ்ப்பாணம் – மருதங்கேணியை அண்மித்த கடற்பரப்பில் 100க்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களை மீட்பதற்காக கடற்படையின் 4 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
அனர்த்ததுக்குள்ளான குறித்த படகில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் அங்கு விரைந்துள்ள நிலையில், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நன்றி..
DAILYCEYLON
Post a Comment