பாக்கிஸ்தானை வென்று T20 உலக சாம்பியன் ஆனது இங்கிலாந்து...!


ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஷான் மசூட் அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சாம் கரண் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்ப்பில் பென் ஸ்டேக்ஸ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைபெற்றுக் கொண்டார்.



அதனடிப்படையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டின் உலக கிண்ணத்தை வெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post