அம்பாறை மாவட்ட காணிகள் தொடர்பான கூட்டம் இன்று (28.11.2022) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன் தலைமையில் அரச மரக்கூட்டுத்தாபன மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப், ஏனைய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், காணி அதிகாரிகள், வன பரிபாலன மற்றும் வன ஜீவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் நியாயமற்ற முறையில் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான தெளிவூட்டலை பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் வழங்கினார். வர்த்தமானியில் கூறப்பட்டுள்ள எல்லைகளுக்கு மாற்றமாக எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள சில இடங்களிலையும் சுட்டிக் காட்டினார்.
வனமோ வனஜீவிகளோ பாதிப்படையாத வகையில் ஆண்டாண்டு காலமாக செய்கை செய்யப்பட்ட காணிகளை நியாயமான முறையில் அதன் உரிமையாளர்களுக்கு வழங்க யோசனைகளை முன்வைத்தார்.
இதனையடுத்து அடுத்த நான்கு வாரங்களுக்குள் குறித்த அதிகாரிகளால் கள விஜயம் செய்து காணிகளை விவசாயிகளுக்கு வழங்குதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் இன் யோசனைகளை ஏற்றுக்கொள்வதாகவும் அதிகாரிகள் கூறினர்.
Post a Comment