கிழக்கு மாகாணத்தில் புதிய கல்வி வலயங்களை உருவாக்குவது தொடர்பான கூட்டம், கல்வி அமைச்சில் இன்று (25.11.2022) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, பொத்துவிலுக்கான கல்வி வலயத்தை தருவதற்கான பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில், பொத்துவிலின் கல்வி மேம்பாட்டில் கல்வி வலயத்தின் உருவாக்கத்தின் மூலம் எட்டப்படும் நன்மைகள் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப், விரிவாக விபரங்களுடன் முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினரின் பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயத்தின் தேவையை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் ஏற்றுக் கொண்டனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், பொத்துவிலுக்கான தனியான கவ்வி வலயத்தின் தேவை குறித்து விபரமாக பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த நிலையில், அது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்ற உறுதிமொழி அன்று வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட விபரங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் பல காலமாக மறுக்கப்பட்ட பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தின் தேவை வெகுவாக உணரப்பட்ட நிலை
இதன் பயனாக, புதிய கல்வி வலயங்களை உருவாக்குவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம் ஜனவரி மாதத்தில் இடம்பெறும் எனவும், அந்தக் கூட்டத்தின் போது, பொத்துவில் கல்வி வலயம் எந்தெந்த கொத்தணி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டு, பெப்ரவரி மாதத்தில் புதிய கல்வி வலயமாக பொத்துவில் கல்வி வலயம் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.
பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயத்தின் தேவை குறித்து, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் தொடர்ச்சியானதும் காத்திரமானதுமான களமாடலின் விளைவாக, புதிய கல்வி வலயம் உருவாக்குவற்கான நம்பிக்கைப் பெருவெளி விரிந்திருக்கிறது.
Post a Comment