கனடாவில் சுகாதாரத் துறைகளில் அதிகரிக்கும் காலி பணியிடங்கள்..!


கனடாவில் சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறையில் காலியிடங்கள் புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

கனடாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான வேலை, வருவாய் மற்றும் வேலை நேரம், வேலை காலியிடங்கள் உள்ளிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இதில், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக உதவித் துறையில் 152,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இது ஜூன் மற்றும் ஜூலை மாத தரவுகளை விட 0.4 சதவீதம் அதிகரித்து மொத்தம் 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் போதிய ஊழியர்கள் இல்லாததால், சில அவசரகால அறைகளை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை அல்லது பிற சேவைகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதார துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப கனடா புலம்பெயர்ந்தோரை பெரிதும் நம்பியுள்ளது. கனடாவில் பதிவுசெய்யப்பட்ட செவிலியர்களில் கால் பகுதியினர் மற்றும் 36 சதவீத மருத்துவர்களும் கனடாவில் பிறந்தவர்கள் அல்ல.

இருப்பினும், வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுநர்கள் கனேடிய அதிகாரிகளிடமிருந்து முறையான உரிமத்தைப் பெறுவது கடினம், இதனால் அவர்கள் தங்கள் துறையில் வேலை தேடுவதும், சுகாதார அமைப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதும் கடினமாக இருக்கலாம்.

இந்த நிலையில், குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) தற்போது வெளிநாட்டு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் குடியேறுவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது ஏற்கனவே கனடாவில் தற்காலிக வதிவிட விசாவில் இருக்கும் மருத்துவர்களுக்கான சில தடைகளை நீக்குகிறது என்றே தெரியவந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post