தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்க தயாராகும் யோகிபாபு?



தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் யோகி பாபு. இவர் நடித்த 'லவ் டுடே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிரபல நடிகர் பிரபாஸ் புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் இதில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

யோகிபாபு விரைவில் கதை எழுதி திரைப்படம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post