கனமழை; நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் நேற்றில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

* காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

*அரியலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

*திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

*வேலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

* நீலகிரி மாவட்டத்தில் நாளை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

*ராணிப்பேட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 

*செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. *பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

*சேலம், கரூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

*தஞ்சாவூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

* திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post