உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்லெண்ணெய்...!


நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் உடலில் உள்ள அதிகபடியான வெப்பம் வெளியேரும்,சருமம் பொலிவோடு மென்மையாக இருக்கும்,உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பொடுகு தொல்லை இருந்தால் வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் பொடுகு தொல்லை நீங்கும்.தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து விடுப்பட்டு நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

நல்லெண்ணெயில் மனித உடலால் தயாரிக்க முடியாத லினோலெனிக் அமிலம் மிக அதிகளவில் இருக்கின்றது.இயற்கையிலேயே விட்டமின் E இருக்கின்றது.நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் நோய்களின் தாக்கம் குறைவதோடு கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post