மீண்டும் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்த விஜய் சேதுபதி...!


விஜய் சேதுபதியின் 46-வது படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

2010-ல் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.

விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று இரவு 7.40 மணிக்கு வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post