ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதுவரை ட்விட்டர் தளத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக் வெரிஃபிகேஷனுக்கு $8 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார் எலான் மஸ்க். மேலும் இனிமேல் வெரிஃபிகேஷன் என்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமானது அல்ல கட்டணம் செலுத்தும் மக்கள் அனைவருக்குமானது என்றும் அறிவித்திருக்கிறார். எலானின் இந்த அறிவிப்பு ட்விட்டரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே போன்று பல்வேறு அதிரடியான மாற்றங்களை ட்விட்டர் நிர்வாகத்திலும் எலான் மஸ்க் கொண்டு வரத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாயிருக்கின்றன.
‘பணியாளர்கள் நீக்கம் : இனிமேல் நோ வொர்க் ஃப்ரம் ஹோம்’
முதல் கட்டமாகச் செலவைக் குறைக்கும் வகையில் சுமார் 3700 ட்விட்டர் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை ட்விட்டரின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் பாதியாகும். அது மட்டுமில்லாமல் இதுவரை ட்விட்டர் நிர்வாகம் பின்பற்றி வந்த வொர்க் ஃப்ரம் எனிவேர் (anywhere) பாலிசியை திரும்பப்பெறவும் எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ட்விட்டர் நிர்வாகம் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வராமலேயே வேலையைப் பார்க்கலாம் என அறிவித்தது. பெருந்தொற்று முடிவுக்கு வந்த பிறகும் கூட இந்த பாலிசியை தொடரப்போவதாக முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான பாரக் அகர்வால் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ட்விட்டர் நிர்வாகம் எலான் கையில் வந்த பிறகு இதில் மாற்றம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். ஏற்கெனவே டெஸ்லா நிறுவன பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் அலுவலகத்துக்கு வர வேண்டும் எனக் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தார் எலான் மஸ்க். ஆகவே, அதே நடைமுறையை ட்விட்டரிலும் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment