அடுத்த வாரம் கிடைக்கவுள்ள அறிக்கை....!


சர்ச்சைக்குரிய சீனி வரிச் சம்பவம் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடுத்த வாரம் தமக்குக் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2020 இல் சர்ச்சைக்குரிய சீனி வரி குறைப்பு சம்பவம் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post