கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா ;மகளுக்கு மருத்துமனையில் சிகிச்சை...!



நடிகை ரம்பா குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் போது விபத்து ஏற்பட்டது;

நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்துள்ளார்.

காரில் அவருடன் குழந்தைகள் மற்றும் ஆயாவும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை, ஆனால் அவரது மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபலங்களும் ரசிகர்களும் ரம்பா மற்றும் அவரது மகளுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post