இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நெதர்லாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ரியான் டென் டோஸ்கேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பாஸ்டர் இனி அந்த அணியின் உதவி பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இந்த அறிவிப்பை கொல்கத்தா அணி நிர்வாகம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டரான ஜேம்ஸ் பாஸ்டர் ஏழு டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடியுள்ளார். அதே போல் ரியான் டென் டோஸ்கேட் 2011-15 வரை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர்.
அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 29 போட்டிகளில் 23.29 சராசரியுடன் 326 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் 2012 மற்றும் 2014 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியில் இடம் பெற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment