முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக முதல்நாளிலேயே தட்டித் தூக்கிய ‘லவ் டுடே’ படம் -வசூல் நிலவரம்...!


பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் கதாநாயாகனாகவும் அறிமுகமாகியுள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே ‘லவ் டுடே’ படம் பாசிட்டிவ் கருத்துக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக இந்தப் படம் ஒரேநாளில் 6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது.



தமிழகத்தில் மட்டும் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியானப் படங்களில் கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்தகேயனின் ‘பிரின்ஸ்’, தனுஷின் ‘நானே வருவேன்’ ஆகியப் படங்கள் முதல் நாளில் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படம் 6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது வியக்க வைத்துள்ளது. இந்தப் படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, ரவீனா ரவி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்திருப்பதால் வரும் நாட்களில் நல்ல வசூலை இந்தப் படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post