இலங்கைக்கு கத்தார் டொன் கணக்கில் மருந்துகளை கொடுத்தது ...!


இலங்கைக்கு 4.7 டொன் அவசர மருத்துவப் பொருட்களை அபிவிருத்திக்கான கட்டார் நிதியம் (The Qatar Fund for Development) அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்த உதவியை கட்டார் நாட்டின் இலங்கைத் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி அல்-சோரூர் மற்றும் இலங்கைக்கான சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அசேல குணவர்தன, இணைப்பாளர் கலாநிதி அன்வர் ஹம்தானி உட்பட இலங்கை சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கைத் தூதரகத்திலுள்ள ராஜதந்திரிகள் முன்னிலையில் இந்த உதவி கையளிக்கப்பட்டது.

இந்த உதவி இலங்கை சுகாதாரத்துறையை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்றும், இலங்கையின் சுகாதாரத் துறையின் சுமையை குறைக்க பங்களிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post