'இயல்பாகவே வடகிழக்கு மாநிலங்களில் மிக விரைவாக சூரியன் மறைவதால் சந்திர கிரகணத்தை முழுமையாக பார்க்கலாம்’ என பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் தோன்றுகிறது. பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணம் என்று சொல்லப்படுகிறது, அந்த வகையில் இன்று இந்த ஆண்டில் கடைசி சந்திர கிரகணம் தோன்றி நிகழ்ந்து வருகிறது.
சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம், பௌர்ணமியின் போதுதான் தெரியும். நிலவு முழுமையாக முழுநிழல் பகுதியில் மறைவது முழுசந்திர கிரகணமாகும்.
வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய பகுதிகளில் இந்த முழு சந்திர கிரகணம் தென்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 2:39 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணிக்கு நிறைவடைகிறது. இதில், முழு சந்திர கிரகணம் 3:46 மணியிலிருந்து 5:11 மணி வரை நடந்தது. சென்னையில் 5:38-க்குதான் சந்திரன் உதயமாகும் என்பதாலும் சென்னையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதாலும் இன்று சந்திர கிரகணத்தை சென்னையில் சரியாக பார்க்க முடியாத சூழல் காணப்பட்டது.
பகுதி கிரகணமும் சந்திரன் உதித்த சில நிமிடங்களில் முடிந்துவிடும். எனவே, கிழக்கு தொடுவானில் சந்திர உதயத்தின் போது கிரகணத்தை சிறிது நேரம் வெறும் கண்களால் கூட காணலாம். மீண்டும் 2023 அக்டோபர் 28-ல் தமிழ்நாட்டில் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தைக் காணலாம்.
மேலும் இன்று தெரிந்த சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவில் நன்றாக தெரியும். கல்கத்தா, கௌஹாத்தி, அகர்தலா உள்ளிட்ட பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை காண முடிந்தது என்று பிர்லா கோளரங்கம் செயல் இயக்குனர் சௌந்தர்ராஜ பெருமாள் தெரிவித்தார்.
Post a Comment