விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஷால்?






லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க உள்ள விஜய் படத்தில் அவருக்கு வில்லனாக விஷாலை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு இறுதிகட்டதில் உள்ளது. இந்த படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பள்ளி இயக்கி உள்ளார். வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். 

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வந்துள்ளது. அதில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். அதுபோல் கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் படத்திலும் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்து இருந்தார்.

இந்த நிலையில் அடுத்து இயக்க உள்ள விஜய் படத்தில் அவருக்கு வில்லனாக விஷாலை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.இதற்காக விஷாலை லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து பேசி கதையும் சொல்லி இருக்கிறார். இருவரும் சந்தித்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. இந்த படத்தில் விஷால் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் இந்தி நடிகர் சஞ்சய்தத், டைரக்டர்கள் கவுதம்மேனன், மிஸ்கின், மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோரும் வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கைதி பட பாணியில் கேங்ஸ்டர் படமாக தயாராக உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post