பாலியல் வன்கொடுமை தொடர்பான 4 குற்றச்சாட்டுகளின் கீழ் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை கோரி மற்றுமொரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் டவுனிங் சென்டர் நீதிமன்றில் பிணை மறுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், இவ்வாறு இன்றையதினம் (14) புதிய பிணை விண்ணப்பத்தை அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பிணை மனு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்காக அரை மணித்தியாலம் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 07 ஆம் திகதி விடுக்கப்பட்ட பிணை கோரிக்கை விசாரணையின் போது, தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறிவிடுவார் என்ற அச்சம் இருப்பதாக ஒரு பொலிஸ் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்த நிலையில் அவரது பிணை மனு நிரகாரிக்கப்பட்டிருந்தது.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் Dating செயலி ஒன்றின் ஊடாக தொடர்பு கொண்ட 29 வயதான அவுஸ்திரேலிய பெண் ஒருவரை கடந்த நவம்பர் 02 ஆம் திகதி சந்தித்துள்ள 31 வயதான தனுஷ்க குணதிலக அவரது சொந்த வீட்டில் குறித்த பெண்ணை மூச்சுத் திணற வைத்து உடலுறுவு கொண்டமை, ஆணுறையை பயன்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment