முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளை நிராகரித்து, பிரதிவாதிகளை விடுவிக்குமாறுகோரி பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பில் எழுத்துமூல அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்தபோது, சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment