டிசம்பரில் மீண்டும் விலை அதிகரிக்கப்படலாம் என்கிறார் லிட்ரோ நிறுவன தலைவர்...!


எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய கடந்த மூன்று மாத காலமாக எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

"எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மறுசீரமைக்கப்படும்.

அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,360 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1750 ரூபாவாகவும், 2.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 815 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலையை 210 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த தொகையில் 130 ரூபாவை நிறுவன மட்டத்தில் செலுத்தி மிகுதி 80 ரூபா விலை அதிகரிப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய கடந்த மூன்று மாத காலமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. இருப்பினும், உலக சந்தையின் விலை நிலவரத்துக்கமைய இந்த மாதம் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசெம்பரில் குளிர்காலம் ஆரம்பமாவதால், எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது" என்றார்.

Post a Comment

Previous Post Next Post