நாவலப்பிட்டி – மீபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(02) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான 10 பேரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
அதிக வேகமே விபத்திற்கான காரணம் என தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நன்றி...
NEWS1ST
Post a Comment