அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டில் முட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
புத்தளத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள நிர்ணய விலைக்கு முட்டை கிடைப்பதில்லை என மக்கள் கூறினர்.
இதனிடையே, முட்டை கிடைக்காததால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
காத்தான்குடியிலும் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற உணவு பாதுகாப்பு, போசணை தொடர்பான கூட்டத்தின்போது, முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையை 55 ரூபாவாக அதிகரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் H.M.P.R. அழககோன் தெரிவித்தார்.
இதேவேளை, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்யும் விற்பனையாளர்களைக் கண்டறியும் வகையில், இன்று முதல் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment