கத்தார் பீபா கோப்பை மைதானங்களில் பீர் விற்பனைக்கு முற்றாக தடை விதிப்பு...!


கத்தார் 2022 உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் அரங்குகளை சூழவுள்ள பகுதிகளில் பீர் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கும் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (FIFA) தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நவம்பர் 20 ஆம் திகதி முதல் டிசெம்பர் 18 ஆம் திகதிவரை உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது,

உலகக் கிண்ண வரவேற்பு நாடான கத்தார் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் பின்னர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பீபா அறிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு பீர் விற்பனை செய்வதற்காக அனுசரணை நிறுவனமொன்றின் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் பியர் விற்பனை திடீர் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

THANKS: QATAR-TAMIL

Post a Comment

Previous Post Next Post