இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கலந்துகொள்ளும் நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் நாளை (10) இடம்பெறவுள்ளது.
நாளை (10) பிற்பகல் 12.30 முதல் பிற்பகல் 01.30 வரை பாராளுமன்றத்தின் @ParliamentLK எனும் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கினூடாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான பொதுமக்களின் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், நாளை நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளைக் கேட்க முடியுமென பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை மையப்படுத்திய பாராளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.
Post a Comment