சென்னையில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 08.30 மணியிலிருந்து இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில்11.2 சென்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 82 செ.மீட்டரும், நந்தனத்தில் 8.7 செ.மீ மழை பொழிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை 08.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நெற்குன்றத்தில்13 சென்டி மீட்டரும், பெரம்பூரில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அயனாவரம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment