பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அறிக்கைகள் எதையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டாம் என பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
அவரது அறிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதையும் மீறி இம்ரான் கானின் அறிக்கைகளை ஊடகங்களில் ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட ஊடகத்தின் ஒளிபரப்பு உரிமம் இரத்துச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த வெள்ளிக்கிழமை பேரணியொன்றில் பங்குபற்றியபோது சுப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானார்.
தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தெரிந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இம்ரான் கான் நேற்று (05) வைத்தியசாலையில் இருந்து குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால், இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
Post a Comment