எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றப்படவுள்ளது.
தொடர்ந்து மறுநாள் நவம்பர் 15ஆம் திகதி விவாதிக்கப்பட்டு இதன்மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டத்தை தோற்கடிப்போம் என்று பொதுஜன பெரமுன கட்சியை சார்ந்த ஒரு தரப்பினரும் மக்களை பாதிக்கும் வரிவிதிப்புக்கள் இடம்பெறுமாயின் ஆதரவு தரமாட்டோமென ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களை ஓரங்கட்டும் முகமாக 22ஆவது திருத்தத்ததை நிறைவேற்ற துணைபோனவர்களுக்கு ஆதரவு தரமாட்டோமென இன்னொரு தரப்பினருமாக எதிர்ப்புக் காட்டிவரும் நிலையில் வரவு,செலவுத்திட்டத்தை பாராளுமன்ற ஆதரவைப்பெற்று ஜனாதிபதி ரணில் எவ்வாறு நிறைவேற்றப்போகிறார் என்பது அக்கினிப் பரீட்சையாக மாறப்போகிறது.
இதனைவிடவும் மஹிந்த ராஜபக்ஷவை வரவு, செலவுத்திட்டத்துக்கு முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்க தவறும் பட்சத்தில் வரவு, செலவுத்திட்டத்தை தோற்கடிக்கப்போவதாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் எச்சரித்துள்ளமையும் முக்கியமான விடயமாகும். ஏலவே அரசியல் அமைப்பின் 22ஆவது சிர்திருத்தத்தை தோற்கடிப்போம் என்று கங்கணம் கட்டிய குழுவினரே வரவு, செலவுத்திட்டத்தை தோற்கடிக்கப்போகிறோமென்று சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அணியினரைப் பொறுத்தவரை யாரோ சிலரால் ஏவிவிடப்பட்ட அம்புகளாகவே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக மீண்டும் கொண்டுவரவேண்டுமென்பதில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கும் இவ்வணியினர் ஜனாதிபதியுடன் கடுமையான வாக்குவாதப்பட்டிருக்கிறார்கள்.
இவ்விவகாரம் தொடர்பாக தன்னை சந்திக்க வந்த அணியினரை ஜனாதிபதி ரணில் கடுமையாக எச்சரித்ததன் காரணமாக ஏமற்றத்துடன் அவர்கள் திரும்பியுள்ளனர். பின்னர், குறித்த அணியினர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து உரையாடியுள்ளனர். அப்போது, மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்பாராயின் அவருக்கு பதவியை விட்டுக்கொடுக்க தான் தயராக இருப்பதாக பிரதமர் தினேஷ் தெரிவித்துள்ளார்.
(RJ)
Post a Comment