மாணவர்களை பொலிஸார் மின்சார சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்..!


ஆசிரியர் ஒருவரின் பேர்ஸ் காணாமல்போனதை தொடர்ந்து மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் அவர்களை மின்சார சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஹங்கமுவவில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் கல்வியமைச்சும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டால் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதல் விடுக்கப்பட்டுள்ளது,பாடசாலை அதிகாரிகள் இதனை மீறினார்களா என்பது தெரியாது விசாரணை அறிக்கைகள் முடிவிற்கு வந்த பின்னரே முடிவிற்கு வரமுடியும் விசாரணைகள் முடிவடைந்ததும் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜெயவர்த்தன பாடசாலை மாணவர்களை பொலிஸார் துன்புறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post