தொடராட்ட நாயகன் போட்டியில் வனிந்து! வாக்களிக்க சந்தர்ப்பம்...!


இவ்வருட T20 உலகக் கிண்ணத் தொடரில் தொடராட்ட வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவை பரிந்துரைத்த பெயர்களில் 09 வீரர்களை உள்ளடக்கியுள்ளதாகவும், ரசிகர்களுக்கு அந்த வீரர்களுக்கு வாக்களிக்க இன்று (11) முதல் இணையத்தளத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வனிந்து ஹசரங்க, இங்கிலாந்து வீரர்கள் ஜோஷ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், சேம் கரன், இந்திய வீரர்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி, சிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா ஆகியோர் போட்டியின் நாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வனிந்து ஹசரங்க, இந்த ஆண்டு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post