ட்விட்டர் நிறுவனம் திவாலாகும் அச்சம்...!


ட்விட்டர் நிறுவனத்தின் புது முதலாளி இலோன் மஸ்க் அந்த நிறுவனம் திவாலாகும் சாத்தியம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஊழியர்களிடையே அவர் முதல்முறையாகப் பேசியுள்ளார். ட்விட்டர், அடுத்த ஆண்டில் பல பில்லியன் டொலரை இழக்க நேரும் என்று அவர் குறிப்பிட்டார். சிரமங்களுக்குத் தயாராக இருக்கும்படி ஊழியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கிய மஸ்க் ஏற்கனவே பாதிப் பேரை ஆட்குறைப்புச் செய்துள்ளார். எனினும் மஸ்க் இந்த சமூக ஊடகத்தை கைப்பற்றியதை அடுத்து விளம்பரதாரர்கள் வெளியேறி வருவதால் அது நாளுக்கு 4 மில்லியன் டொலர்களை இழந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டரில் போலிக் கணக்குகளை நிறுத்துவதாக உறுதி அளித்திருக்கும் மஸ்க் புதிய கட்டண முறை பற்றியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post