சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் பிரபல தெலுங்க பட நடிகர் இணைந்துள்ளார்.
சிவகார்த்திகேயர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை. கதையில் புதுமை ஏதும் இல்லாததால் படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஹேர்ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக 90களில் இருக்கும் ரஜினியை போன்று இருந்தது. அத்துடன், சண்டைக்காட்சிகள் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது போல் மோஷன் போஸ்டர் காட்சிகள் இருந்தது.
'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா நடிக்கிறார் மற்றும் இந்த படத்தில் இயக்குனர் மிஸ்கின் வில்லனாகவும், யோகி பாபு, யூடியூப் பிரபலம் மோனிஷா பிளெஸ்ஸி போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், மாவீரன் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைய உள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் தெலுங்கு சினிமா உலகில் காமெடியனாக பல வருடங்கள் கலக்கியவர். பின்னர் ஹீரோ ஆக சில படங்களில் நடித்தார். அது நீண்ட காலம் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தற்போது மிரட்டி வருகிறார். புஷ்பா படத்தில் அவரது மிரட்டலான வில்லன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மாவீரன் படத்தில் அவர் கமிட் ஆகியிருக்கிறார். கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள ஜப்பான் படத்திலும் இவர் கமிட் ஆகியுள்ளதாக தெரிகிறது.
Post a Comment