இலங்கையருக்கு சவூதியில் தொழில் வாய்ப்பு வசதி...!


கட்டட நிர்மாணத்துறையில்,பொறியியலாளராகவோ அல்லது தொழிநுட்பவிலாளராகவோ பணியாற்றுவதற் காக சவூதி அரேபியா செல்வோர்,சவூதி பொறியியல் பேரவையில் பதிவு செய்வது அவசியமென இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் கட்டட நிர்மாணத் துறையுடன் தொடர்புடையபல வேலை வாய்ப்புகள் இலங்கைக்கு விரைவில் கிடைக்குமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்,நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தற்போது சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இவ்வாறான நிர்மாணத் துறைகளில் இலங்கை நிபுணர்களுக்கு கிடைக்கவுள்ள வேலைவாய்ப்புக்கள் தொடர்பில்,அங்கு அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாக பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post