வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை...!


வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதனை அடுத்து, பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, கோவை மாவட்ட வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

மேலும், கோவை குற்றாலத்திற்கு செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்து, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post