நள்ளிரவு முதல் ஒரு சில சிற்றுண்டிச்சாலை உணவு வகை விலை குறைப்பு...!


சிற்றுண்டிச்சாலை உணவு வகைகள் சிலவற்றின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு சில சிற்றுண்டி தயாரிப்புகளின் விலைகள் குறைக்கப்படுவதாக, அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி ஆகியவற்றின் விலைகளை ரூ. 10 இனால் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



அத்துடன், தேநீர் ரூ. 30 இற்கும், பால் தேநீர் ரூ. 100 இற்கும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று முதல் பாண் விலை ரூ. 10 இனால் குறைப்பதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை ரூ. 250 வரை குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும், சமையல் எரிவாயுவின் விலை பல கட்டங்களில் குறைப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இவ்வாறு கோதுமை மா சார்ந்த உணவுகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post