சென்னையில் வாசல் கேட்டை அடைக்க சென்ற கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், மனைவியும் சேர்ந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுது்தியுள்ளது.
வீட்டு கேட்டை அடைக்க சென்ற நபர் சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் வருமான வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், இவரது மனைவி பானுமதியும் தடய அறிவியல் துறையில் துணை கண்காணிப்பாராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்த தம்பதிகளில், மூர்த்தி நேற்று நள்ளிரவு வீட்டின் கேட்டை அடைக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கேட்டில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே நின்றுள்ளார். கணவர் உயிரிழந்தது தெரியாமல் அவரது மனைவி கணவரை வந்த தொட்டவுடன் அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனை அவதானித்த எதிர் வீட்டில் வசித்த நபர், இரண்டு பேரையும் மீட்க சென்ற நிலையில், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சுதாரித்துக் கொண்ட வெங்கட்ராமன் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்பு காவல்துறையினர் விரைந்து வந்த உயிரிழந்த இருவரின் சடலத்தை மீட்டு அருசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Post a Comment