நாட்டிலிருந்து வெளியேறுபவர்கள் அதேபோன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நாடு திரும்புவதற்கு தேவையான ஆவண வசதிகள் இவற்றில் அடங்கும்.
இதில் ஆவணங்களை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். இந்த செயற்பாடுகளோடு தொடர்புபட்ட ஏனைய பங்குதாரர்களையும் இணைத்துக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆவணங்கள் உறுதிப்படுத்தப்படாத காரணத்தால் சில போலி ஆவணங்கள் மூலம் பல மோசடிகள் பெறுகின்றமை தெரிய வந்துள்ளது.
இதனை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
வெளிநாடுகளிலுள் கொன்சியூலர் காரியாலங்கள் தூதுவர் காரியாலயங்கள் ஊடாகவும் இந்த செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment