ஒரு குடும்பத்தில் பிள்ளை மனைவி என்று இருக்கும் போதே பல பிரச்னைகள் வரும் அதனை சமாளிப்பதே கடினம் என தனக்கும் தன் மகன் நடிகர் விஜய்க்கும் இடையே இருக்கும் பிரச்னைகள் பற்றி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மறைமுகமாக பேசினார்.
எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது. இதில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய சந்திரசேகர்... எடப்பாடி பழனிசாமி எப்படி ஆட்சி செய்வார் என்று சந்தேகம் அடைந்தேன். அவரை தாக்கியும் பேசியுள்ளேன், ஆனால் சாமானிய ஒருவர் முதல்வராக வந்து உட்கார்ந்தார். அவர் முதல்வர் பதவிக்கு சிறந்த நிர்வாகி என்று உறுதிப்படுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி ரொம்ப எளிமையானவர், மனிதநேயம் மிக்க மனிதர். என்று பேசிய சந்திரசேகர் தொடர்ந்து... எவ்வளவு இக்கட்டான நேரத்திலும் அவரிடம் சிரிப்பு மட்டுமே வரும். ஒரு குடும்பத்தில் பிள்ளை மனைவி என்று இருக்கும் போதே பல பிரச்னைகள் வரும் அதனை சமாளிப்பதே கடினம் என்று பேசினார்.
Post a Comment