நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றால், அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்தார்.
நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் அதிகளவானோர் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.
அண்மையில் சட்டவிரோதமாக சென்ற 303 இலங்கையர்களில் 302 பேர் வியட்நாமில் உள்ளனர். அதில் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டார்.
அதேபோன்று யுக்ரைனிலும் தமிழ் பேசும் 7 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வியட்நாமில் உள்ள குறித்த 303 பேரில் 85 பேர் மீள நாடு திரும்புவதற்கு இணங்கியுள்ளனர். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு சட்டவிரோத பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு தெளிவூட்டல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
சட்டவிரோதமாக சென்றால் அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என அறிவுறுத்தல் விடுக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Post a Comment