பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாது - கெமுனு


டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு பஸ் கட்டண திருத்தம் எதுவும் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.

டீசல் விலை அதிகரிப்பு பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் எவ்வித உடன்படிக்கையையும் ஏற்படுத்தாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



மேலும், அக்டோபர் 17 ஆம் திகதி டீசல் விலை லீற்றருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டு, நேற்று இரவு 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலை 415 ரூபாவிலிருந்து 430 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Post a Comment

Previous Post Next Post